சென்னை: மாண்டஸ் புயல் நள்ளிரவு கரையை கடந்த நிலையில், இன்றும் காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் பெய் மழை அளவுகள் குறித்து வானிலை மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. அதில் அதிகபட்ச மழை திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் பதிவாகி உள்ளது. இங்கு 142 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாகத்தில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு முதல் மெல்ல மெல்ல கரையைக் கடக்கத் தொடங்கியது. இரவு 9 மணி முதல் லேசாக தொடங்கியது காற்று அதிகாலை 3 மணிக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. இந்த புயல் காரணமாலக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், நள்ளிரவு பெய்த கனமழை மற்றும் சூறாவளிக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுகிதளிலும் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. கோவளம் கடற்கரை பகுதியில் இருந்த கடைகள் காற்றின் வேகத்தில் சின்னாபின்னமாகின.
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 142 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், அதிகபட்ச மழை பொழிவு குறித்த தகவலை தெரிவித்தார்.
காட்டுப்பாக்கத்தில் 142 மில்லிமீட்டரும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 மில்லிமீட்டர் மழையும் பதிவானதாக தெரிவித்தார். மீனம்பாக்கத்தில் 103 மில்லிமீட்டரும், மாதவரத்தில் 87 மில்லிமீட்டரும், திருவள்ளூரில் 83 மில்லிமீட்டர் மழையும் பதிவானதாக கூறினார்.
”புயல் கரையை கடந்த பகுதிகளில் தான் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். வடமேற்கு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு காற்று அதிகமாக வீசும்எதிர் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. வலுவிழுந்த மரங்கள் காற்றின் வேகத்தில் விழலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.