ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா தேர்வு.!

இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைவராக டோரப்ஜி டாட்டாவும், செயலாளராக ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வி இயக்குனராக இருந்த நோரனும் பொறுப்பேற்றனர். அதன்பிறகு, பல மாநிலங்களில் ஒலிம்பிக் சங்கங்கள், இந்திய ஒலிம்பிக் சங்க உறுப்பு அமைப்புகளாக தொடங்கப்பட்டன. அதே ஆண்டில், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அதிகாரபூர்வ அங்கீகாரம் அளித்தது.

இந்தியாவில் விளையாட்டு வளர்ச்சிக்கும், சர்வதேச போட்டிகளில் இந்திய அணிகள் கலந்துகொள்வதற்கும், பல்வேறு தேசிய, சர்வதேச போட்டிகளை இந்தியாவில் நடத்துவதிலும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பங்கு அளப்பரியது. அதன் விளைவாக இந்தியா இதுவரை மொத்தம் 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இவற்றுள் 10 தங்கப் பதக்கங்களும் 4 வெள்ளிப் பதக்கங்களும், 11 வெண்கலப் பதக்கங்களும் பெற்றுள்ளது.

இந்தநிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் நடத்­தப்­பட வேண்­டிய ஒலிம்­பிக் சங்கத்­தின் தேர்­தல் 10 மாதங்களாக நடத்­தப்­ப­டாமல் இருந்தது­. இதையடுத்து அனைத்­து­லக ஒலிம்­பிக் மன்­ற­மும் ஆசிய ஒலிம்­பிக் மன்­ற­மும் கூட்­டாக, இந்­திய

ஒலிம்­பிக் சங்­கத்­திற்குக் கடி­தம் ஒன்றை அனுப்­பின.

“இந்­திய ஒலிம்­பிக் சங்­கத்­தின் அண்­மைய செயல்­பா­டு­கள் எங்­க­ளுக்­குக் கவலை அளிக்­கி­றது. பிரச்­சி­னை­க­ளுக்கு தங்­க­ளுக்­குள் தீர்வு காணா­மல், நீதி­மன்­றத்தை நாடு­வது துர­திர்­‌ஷ்­ட­வ­ச­மா­னது. இனியும் தாம­தப்படுத்தாமல் இந்­திய ஒலிம்­பிக் சங்­கத்­திற்­கான தேர்­தலை நடத்­த­வேண்­டும். இல்­லை­யென்­றால் தேர்­தல் நடை­பெற்று இந்­திய ஒலிம்­பிக் சங்­கம் வழக்­க­மாக செயல்­படும் வரை, அனைத்­து­லக ஒலிம்பிக் மன்­றத்­தில் இருந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் நீக்­கப்­படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, டிசம்பர் 10ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த நவம்பர் 27ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு, கேரளாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை பி.டி.உஷா வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் அவரை தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதனால் பி.டி.உஷாவின் வெற்றி அப்போதே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்தநிலையில் இன்று ஒலிம்பிக் சங்க தலைவராக பி.டி.உஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘நான் சொன்னேன்; நீங்க செஞ்சிட்டீங்க!’ – தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி!

58 வயதான பி.டி.உஷா, பா.ஜ.க. அரசாங்கத்தில் தற்போது நியமன எம்.பி.யாக இருக்கிறார். மேலும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெயரையும் பி.டி.உஷா பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.