சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘பாபா’ திரைப்படம் 20 ஆண்டுகள் கழித்து இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
மாண்டஸ் புயல் தனது முத்திரையை பதித்து சென்றுள்ளபோதும் ‘பாபா’ கவுண்ட்-டைக் காண ரஜினி ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.
அரசியல் பாதையே சரி என்று ஏற்கனவே இருந்த கிளைமேக்ஸ் தற்போது தனது ரசிகர்களுக்கு சலிப்பு தட்டக் கூடும் என்பதால் அதன் கிளைமேக்ஸ் இப்போது மாற்றப்பட்டுள்ளது.
‘நீ உன் தாயின் மனதை காயப்படுத்தி இருக்கிறாய். எனவே மீண்டும் பிறந்து தாயின் ஆசையை நிறைவேற்று. நேரம் வரும்போது உன்னை அழைக்கிறேன்’ என பாபா கூறுவது போல் இறுதிகாட்சி மாற்றப்பட்டுள்ளது