புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.
குஜராத் மாநில அரசு இவர்கள் விடுதலை குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், அம்மாநில அரசு 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்தது. இந்த வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.