
விஜய்யைத் தொடர்ந்து தனுசுடன் மோதும் சஞ்சய்தத்!
தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் அவரது அண்ணனாக ஒரு நெகடிவ் ரோலில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் தனுஷ். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த படத்திற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஆரம்ப கட்ட பணிகள் நடை பெற்று வருகிறது.
மேலும் இப்படத்தில் முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இந்த படத்தின் வில்லன் வேடம் வலிமையானது என்பதால் பல நடிகர்களை பரிசீலனை செய்து வந்த சேகர் கம்முலா தற்போது சஞ்சய் தத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படத்தில் நடிக்க அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 67வது படத்திலும் முக்கிய வில்லனாக நடிக்கும் சஞ்சய்தத் அப்படத்தை அடுத்து தனுசுடன் நடிக்கப் போகிறார்.