வைரலாகும் வீடியோ..!! முதலை போல் உடை அணிந்து முதலையை சீண்டிய நபர்!!

சமூக வலைத்தளங்களில் தற்போது எண்ணற்ற வீடியோக்கள் நாள்தோறும் வைரலாகி வருகிறது. குழந்தைகளின் குறும்புத்தனமான வீடியோக்கள், யானை, நாய் போன்ற விலங்குகளின் வீடியோக்கள், நெகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய வீடியோக்கள் என பலவும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் முதலை போன்று உடையணிந்த ஒருவர் உண்மையான முதலையின் கால்களை பிடித்து இழுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதலைகள் நீரில் வசிக்கும் தன்மை கொண்ட ஊர்வன வகையை சேர்ந்தவை. மனிதர்களுக்கு பொதுவாக தீங்கு விளைவிக்காது என்றபோதிலும், ஒரு சில முதலை வகைகள் மனிதர்களை தாக்கிய சம்பவங்களும் நடந்ததுண்டு.

இந்நிலையில், முதலை போன்று உடையணிந்த நபர் ஒருவர், உண்மையான முதலை ஒன்றின் அருகே ஊர்ந்து சென்றுள்ளார். அந்த முதலை கரையோரம் படுத்திருந்தது. இந்த நபர், மெல்ல முதலையின் அருகே சென்று அதன் வலது பின்னங்காலை பிடித்து இழுத்துள்ளார். அந்த முதலை அசதியில் இருந்ததோ அல்லது கருப்பு நிறத்தில் மற்றொரு முதலை இருக்கிறது என நினைத்ததோ தெரியவில்லை. மெல்ல தனது காலை அந்நபரின் பிடியில் இருந்து விடுவித்து தன் பக்கம் இழுத்து கொண்டது.

ஆனாலும் இந்த நபர், வாலை தடவி கொடுத்து, மீண்டும் காலை பிடித்து இழுத்துள்ளார். அதுவரை முதலை அமைதியாகவே இருந்துள்ளது. 10 வினாடிகள் ஓட கூடிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக முதலைகள் கரையோரத்தில் ஓய்வாக இருக்கும்போது, அமைதியுடன் காணப்படும். எனினும், சில சமயங்களில் அதனை சீண்டும்போது தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் ஆபத்தும் உள்ளது. அது தெரிந்தும் துணிச்சலுடன் இந்த நபர் முதலையை நெருங்கியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பல விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.