கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மினி லாரி மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளிகள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அத்திப்பள்ளி-ஆனேக்கல் சாலையில் வேலையை முடித்துவிட்டு வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரி ஒன்று இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இந்த விபத்தில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அத்திப்பள்ளி போலீசார், உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற மினிலாரி ஓட்டுநர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.