விஜயை இயக்கும் விஷால்? எப்போ தெரியுமா!

நடிகர் விஷாலின் ‘லத்தி’ திரைப்படம் அடுத்த சில நாட்களில் வெளிவர உள்ள நிலையில், திருச்சி தெப்பக்குளம் எல்.ஏ சினிமாஸ் திரையரங்கில் இன்று நடிகர் விஷால் மற்றும் படகுழுவினர் வருகை தந்தனர். ரசிகர்களை சந்தித்து நடிகர் விஷால் அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

இதில் ரசிகர்கள் பல்வேறு காரசாரமாக கேள்விகளுக்கு விஷால் அளித்த பதில்:

உங்களின் அரசியல் வருகை எப்போது இருக்கும் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு ?

நான் ஏற்கெனவே அரசியல்வாதியாக தான் உள்ளேன். நான் மட்டுமல்ல இங்கு இருக்கும் அனைவருமே அரசியல்வாதி தான். மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைவரும் அரசியல்வாதி என்பதை உணர வேண்டும் என்று விஷால் பதில் அளி்த்தார்.

Rajinikanth:அண்ணாமலைக்கு முதலிடம், உதயநிதிக்கு இடமே இல்லையா?: வம்பில் சிக்கிய ரஜினி

உங்களுடன் மிக நெருக்கமான நண்பராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து படம் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு ?

நாளை உதயநிதி அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். தொடர்ந்து படம் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அவரோடு இணைந்து கண்டிப்பாக நடிப்பேன் அதற்கான நேரமும் காலமும் வரும்போது என்று அவர் பதில் அளித்தார்.

ரசிகர்களுடன் கலந்துரையாடலுக்கு பின்னர் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருந்தால் அதில் வித்தியாசம் தெரிந்திருக்காது. தற்போது கான்ஸ்டபிளாக நடித்திருப்பது தான் லத்தி படத்தின் வித்தியாசம். இந்த படத்தின் கடைசி 45 நிமிடங்கள், வேறு எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு இருக்கும்.

ஓ.டி.டி 20 முதல் 25 சதவீதம் சினிமா பார்க்கும் மக்களை எடுத்து சென்றுவிட்டது. இருந்தப்போதும் நல்ல கதை அம்சம் இருக்கும் திரைப்படங்களை கண்டு களிக்க மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். ஓ.டி.டியால் பார்வையாளர்கள் குறையவில்லை; பிரிந்து தான் இருக்கிறார்கள்.

விஜய் படத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் பல படங்கள் இருப்பதால் என்னால் அவருடன் நடிக்க முடியவில்லை. நடிகர் சங்க கட்டிடம் ஏற்கனவே கட்டி முடித்திருப்போம். ஆனால் தேர்தலை நிறுத்தி மூன்று ஆண்டுகள் காலம் தாழ்த்தியதால் தான் அந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதை கட்டுவோம்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

விஜயை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது என் ஆசை. நேரமும், காலமும் வரும்போது நல்ல கதையாக விஜய்யிடம் கூறுவேன்.

தொடர்ச்சியாக படம் நடித்துக் கொண்டு இருக்கிறேன். அரசியலுக்கு வருவது தொடர்பாக அதற்குரிய காலம் வந்தால் தான் பதில் கூற முடியும்.

என் நண்பர்களான ராஜா, மகேஷ் ஏற்கெனவே அமைச்சர்களாக இருக்கிறார்கள். தற்போது அந்த வரிசையில் உதயநிதியும் இணைந்துள்ளார். அது எனக்கு பெருமையாக உள்ளது. நடிகர் சங்கத்தின் கோரிக்கைகளை உரிமையுடன் அவர்களிடம் கேட்பேன்.

துப்பறிவாளன் 2 படம் அடுத்த ஆண்டு வெளியிடப்படும். மிஷ்கினுடன் இணைய நான் தயாரில்லை என்ற விஷால் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.