கனமழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் அல்லாடி வருகின்றனர்.
பலரும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் அரசு முகங்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்றும் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மதியம் ஒரு மணி நேரமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, பெரம்பலூர் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள பாலக்கரையில் பாதாள சாக்கடை உள்ளிருந்து மழை நீரும், கழிவுநீரும் கலந்து பொங்கி பொங்கி சாலையில் ஓடுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளனர். இதே நிலை, நீடித்தால் அப்பகுதி முழுவதும் கழிவுநீராக மாறக்கூடும். இதனால் நோய் பரவுகின்ற அபாயமும் இருக்கிறது. இதனால், பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.