
லைசென்ஸ் என்ற படத்தில் பாடகி ராஜலட்சுமி நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று நடிகர் ராதாரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேடையில் பேசிய அவர், தன்னுடைய தந்தை சொன்னது போல், சினிமா அடிக்கிற காற்றில் நம்மை அப்படியே தூக்கிச் செல்லும். அடுத்த காற்றில் கீழே விழுந்து விடுவோம். அதனால் ராஜ லட்சுமி எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளக் கூடாது என்று கூறினார்.
சினிமாவில் இப்போதெல்லாம் ஹீரோவே வில்லனாகவும் நடித்து விடுகிறார். கவர்ச்சி நடிகை வேடத்தை ஹீரோயினே எடுத்துக் கொள்கிறார். அப்பா அம்மா கேரக்டர் என்றால், ஹீரோவே இடைவேளைக்கு பிறக்கு அப்பா ஆகி விடுகிறார் என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாரதி என்ற கேரக்டரில் ராஜ லட்சுமி நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதை தமிழ் சினிமாவில் வராத கதை. எனது 49 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் இதுபோன்ற கதையை நான் பார்க்கவில்லை.
குத்து விளக்கு ஏற்றும்போது கூட ராஜலட்சுமி அவரது கணவரை அழைத்தார். எதற்கு கணவரை அழைத்து வருகிறீர்கள். அழைத்து வராதீர்கள், பாதுகாப்பு என்று நினைக்கிறீர்கள், ஆனால் தொல்லை என்று பேசினார்.

உங்களுக்கு நீங்கள்தான் பாதுகாப்பு. யாருமே யாரையும் பாதுகாக்க முடியாது. சினிமா மட்டுமல்ல, ஆபிசிலும் சரி, அரசியலிலும் சரி. நாம் நம்மைக் காப்பாற்றிக் கொண்டால்தான் முடியும் என்று அவர் பேசினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in