தற்போது நிதிஆண்டில் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரைக்கும் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது.. மேலும், ஆண்டு ரூ.5 லட்சம் மொத்த வருமானம் உள்ளவர்களுக்கும் வருமானவரியில் ரூ.12,500 வரித் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பார்க்கும்போது ரூ. 5 லட்சத்துக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் வரிக் கட்ட வேண்டியதில்லை. என்ற நிலை உள்ளது.

மத்திய பட்ஜெட் 2023-24
2023 -ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், அடிப்படை வருமான வரி வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி அதிகரிக்கும்பட்சத்தில் அனைத்து தரப்பினருக்கும் வருமான வரி மிச்சமாகும். அவர்கள் அதனை முதலீடு செய்வார்கள் அல்லது தேவைக்கு செலவு செய்வார்கள். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சிக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, குறைவான வரி என்றாலும் புதிய வருமான வரி முறையை சுமார் 10 சதவிகிதம் பேர்தான் பின்பற்றி வருகின்றனர். காரணம், அந்த முறையில் வருமான வரிப் பிரிவு 80C மற்றும் 80D கீழ் வருமான வரிச் சலுகை கிடையாது என்பதாகும். பழைய வரி முறையில் அதிக முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கு வரிச் சலுகை இருப்பதால் அதனைதான் பெருவாரியானவர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

பழைய வருமான வரி முறை மற்றும் புதிய வருமான வரி முறை ஆகியவற்றை பொறுத்தமட்டில் ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரித் தள்ளுபடி இருக்கிறது.
அடிப்படை வருமான வரம்பை மத்திய பட்ஜெட் 2023-24-ல் ரூ. 5 லட்சமாக அதிகரிக்கும்பட்சத்தில் ரூ. 5 லட்சத்துக்கு மேல் வரி வருமானம் உள்ளவர்கள் கட்டும் வரி குறையும்.