என் வீட்டுக்கு வா… எனக்கு பயமாக இருக்கு சார்.. நான் பார்த்துக்கிறேன் வா..! மாணவியிடம் வக்கிரத்தை கக்கிய வாத்தி

நாகப்பட்டினம் அருகே கார்த்திகேயன் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்த உடற்கூறுஇயல் ஆசிரியர் உடனான உரையாடல் ஆடியோ வெளியான நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வக்கிர வாத்தியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாகப்பட்டினத்தை அடுத்த புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் கார்த்திகேயன் நர்சிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அக்கல்லூரியில் உடற்கூறுஇயல் ஆசிரியராக நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதிஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அக்கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவி ஒருவரை மிரட்டிய ஆசிரியர் சதிஷ், தனது வீட்டுக்கு வருமாறு அழைத்து மிரட்டும் செல்போன் உரையாடல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும் மாணவிகளும் பேசிக் கொள்ளகூடாது என்ற விதி உள்ள நிலையில் மாணவர்களிடம் பேசும் மாணவிகளை ஆசிரியர் சதிஷ் தனியாக அழைத்து கண்டிப்பதாக கூறி அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும், சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் சதீஷிடம் சிக்கிய மாணவி ஒருவரை அவர் மிரட்டி வீட்டுக்கு அழைத்ததாகவும் ஆடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மாணவ மாணவிகள் புகார் அளித்தனர்.

அந்த ஆடியோவில், ஆசிரியர் வீட்டுக்கு செல்வதை தவிர்ப்பதற்காக தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாக சொல்லி அந்தபெண் சமாளிக்க அதையும் புரிந்து கொள்ளாத ஆசிரியர் சதீஷ், பரவாயில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் வா… என்று தனது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்தது அம்பலமாகி உள்ளதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்த சம்பவம் குறித்து கல்லூரியின் தாளாளர் கார்த்திகேயன், மாணவ மாணவிகளை அழைத்து விசாரித்தார். அப்போது அந்த ஆசிரியர் அங்கு வந்ததால் அவருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆசிரியர் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது

மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட நர்சிங் கல்லூரி மாணவிகளிடம் சமூகநலத்துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். ஒவ்வொறு மாணவியிடமும் தனித்தனியாக எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்ட சமூகநலத்துறை அதிகாரி, அதனை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து அந்த வக்கிர வாத்தி சதீஷ் மீது மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த கல்லூரி தாளாளர் கார்த்தி, 15 நாட்களுக்கு முன்னர் தான் , சதீஷை வேலைக்கு சேர்த்ததாகவும் அவரது நடவடிக்கை தொடர்பாக விசாரித்த சமூக நலத்துறை அறிக்கை அளித்ததன் அடிப்படையில் அவரை போலீசார் வந்து அழைத்து சென்றதாகவும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.