
ஜாக்குலின் மீது நோரா அவதூறு வழக்கு
பெங்களூருவை சேர்ந்த மோசடி தரகர் சுகேஷ் சந்திரசேகர் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து கொண்டே தொழில் அதிபர்களிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேசுக்கு உதவியதாக பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அமலாக்கத்துறையிலும், நீதிமன்றத்திலும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஜாக்குலின் மீது, மோசடி வழக்கு நடந்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் நோரா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “ஜாக்குலின் சில ஊடக நிறுவனங்களுடன் இணைந்து எனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். என்னை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தவும், சமூக ரீதியாக என்னை பலவீனப்படுத்தவும் சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார். இந்த மோசடி வழக்கில் துளியும் தொடர்பில்லாத என்னை இழுத்து விட்டிருக்கிறார். எனவே அவர் மீதும், அவருக்கு துணையாக உள்ள ஊடக நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த ம-னுவில் ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.