உள்நாட்டுக் கலகத்திற்கு தயாராகும் நகரம்… ஆயிரக்கணக்கான பொலிசார் குவிப்பு: கத்தாரில் உறுதியாகும் முடிவு


கத்தார் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் மோதும் நிலையில், பாரிஸ் நகரில் இரு அணி ரசிகர்களிடையே உள்நாட்டுக் கலகம் வெடிக்க வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.

பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள்

புதன்கிழமை இரவு பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் கத்தார் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மோதவிருக்கிறது.
இதனையடுத்து பாரிஸ் தெருக்களில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டுக் கலகத்திற்கு தயாராகும் நகரம்... ஆயிரக்கணக்கான பொலிசார் குவிப்பு: கத்தாரில் உறுதியாகும் முடிவு | Paris Civil War Cops Descend Battlefield

Shutterstock

பாரிஸ் நகரத்தை பொறுத்தமட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மொராக்கோ மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரான்ஸ் முழுவதும் 10,000 பொலிசார் களமிறக்கப்பட்டுள்ளதில் தலைநகர் பாரிஸில் மட்டும் 5,000 பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கத்தார் உலகக் கோப்பையில் மொராக்கோ அணியின் வெற்றியின் போது பாரிஸ் நகரத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு அதிகாரிகள் தற்போது இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

உள்நாட்டுக் கலகத்திற்கு தயாராகும் நகரம்... ஆயிரக்கணக்கான பொலிசார் குவிப்பு: கத்தாரில் உறுதியாகும் முடிவு | Paris Civil War Cops Descend Battlefield

@getty

ஆயுதங்கள் கொண்டுவரத் தேவையில்லை

மட்டுமின்றி, பிரான்ஸ் மற்றும் மொராக்கோ மோதலுக்கு முன்னர் Champs-Elysees மூடிவிடவும் நகர மேயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், வெற்றியைக் கொண்டாட விரும்பினால், நீங்கள் ஆயுதங்கள் கொண்டு வரத் தேவையில்லை. ஆனால் இவர்கள் உண்மையில் இரும்பு கம்பிகளால் அடித்து நொறுக்கத்தான் வருகிறார்கள் என குற்றஞ்சாட்டியுள்ளார் நகர மேயர் Jeanne d’Hauteserre.

புதன்கிழமை விளையாட்டை எண்ணி பலர் கலக்கத்தில் உள்ளனர். உள்நாட்டுக் கலகம் உறுதி என தெரிவித்துள்ளார் மேயர் Jeanne d’Hauteserre. கடந்த வாரம் போர்ச்சுகல் அணிக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி வெற்றியை கொண்டாட சுமார் 20,000 மக்கள் Champs-Elysees பகுதியில் திரண்டனர்.

உள்நாட்டுக் கலகத்திற்கு தயாராகும் நகரம்... ஆயிரக்கணக்கான பொலிசார் குவிப்பு: கத்தாரில் உறுதியாகும் முடிவு | Paris Civil War Cops Descend Battlefield

Shutterstock

இந்த நிலையில் பொலிசாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது, பொலிசார் கண்ணீர் குண்டுகளை பயன்படுத்தினர்.
ஆத்திரம் கொண்ட ரசிகர்கள் நூற்றுக்கணக்கான கடைகளை சேதப்படுத்தினர், கார்கள் தீக்கிரையாக்கப்பட்டது, சுமார் 100 பேர் கைதானார்கள்.

மட்டுமின்றி, மொராக்கோவுடனான பிரான்சின் காலனித்துவ வரலாறு இன்னும் அதிகமான அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் என்றே நம்பப்படுகிறது.
ஒட்டுமொத்த பிரான்ஸ் மக்கள் தொகையில் 1.5 மில்லியன் மொராக்கோ மக்கள் போர்ச்சுகல் உடனான வெற்றியை வெறித்தனமாக கொண்டாடியிருந்தனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.