உதயநிதியை கேலி செய்து பாஜக போஸ்டர்!!

அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை கேலி செய்து பாஜகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அண்மையில் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்கு சென்ற உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, திட்டங்கள் அமலாக்கத்துறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினை கேலி செய்து மதுரையில் பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். திமுக ஊழல் அமைச்சரவையில் இடம்பெறும் ப்ளே பாய்க்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளனர்.

அதே போல், மெரினா மரப்பாதை மூலம் வைகை தெர்மோகோல் சாதனையை முறியடித்த சின்னருக்கு வாழ்த்துகள் என கேலி செய்து பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.