காபூல்: ஆப்கானிஸ்தானில் விபச்சாரம், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20 ஆண்களுக்கு நேற்று சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் அதிரடியாக கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர். இவர்களின் ஆட்சி அமைத்தவுடன் குற்றச்செயல்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுள்ளன.
இந்நிலையில், ஹெல்மெண்ட் மாகாண அரசின் செய்தி தொடர்பாளர் முஹமது காசிம் ரியாஸ் கூறியதாவது: விபசாரம், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20 ஆண்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஹெல்மெண்ட் மாகாண தலைநகர் லஷ்கர் காஹ்கில் உள்ள விளையாட்டு மைதானத்தில், 20 பேருக்கும் நேற்று சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அனைவருக்கும், 35 முதல் 39 சவுக்கடிகள் தரப்பட்டன.
இந்த தண்டனை, அரசின் உயர் அதிகாரிகள், மதகுருமார்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement