நயன்தாராவுக்காக தற்கொலை முயற்சி செய்தவர் அமைச்சரா? கடுமையாக விளாசிய அதிமுக எம்.பி


உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததற்கு மாநிலங்களவை எம்.பி சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.


உதயநிதிக்கு அமைச்சர் பதவி

திமுக இளைஞர் அணியின் செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

ஆனால், திமுக வாரிசு அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன. மேலும் பொதுமக்களில் பலரும் இதனை விமர்சிக்க தொடங்கினர்.

உதயநிதி ஸ்டாலின்/Udhayanidhi Stalin


சி.வி சண்முகம் கடும் விளாசல்

இந்த நிலையில், திமுக அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

அப்போது இதில் கலந்துகொண்ட அதிமுக பிரமுகரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சி.வி.சண்முகம் அமைச்சராக பதிவியேற்ற உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறுகையில், ‘இது என்ன ஜனநாயக நாடா? தாத்தா முதலமைச்சர், மகன் முதலமைச்சர், இப்போது பேரன் அமைச்சர், தங்கச்சி எம்.பி. அடுத்து துணை முதலமைச்சர், அதுக்கு அப்புறம் நாடு என்ன ஆகுமோ?

இப்படி ஒரு குடும்பமே நாட்டை சுரண்டி கொண்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்/Udhayanidhi Stalin

இதுக்கு தான் ஒட்டு போட்டோமா?

உதயநிதி இந்த நாட்டுக்காக அல்லது இந்த மக்களுக்காக என்ன பண்ணிட்டார்? நம்மள விடுங்க, திமுகவுக்கு என்ன பண்ணிட்டார்? போராட்டத்தில் கலந்துகொண்டாரா? சிறைக்கு சென்றாரா? யார் இந்த உதயநிதி? 5 ஆண்டுகளுக்கு முன்னாடி வரை நடிகைகள் பின்னாடி சுற்றிக் கொண்டிருந்தார்.

நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை வரை சென்றவர் தான் இந்த உதயநிதி.

இன்றைக்கு இவர் தான் தமிழ்நாட்டின் அமைச்சர் என்பது வெட்கக்கேடு.

சி.வி.சண்முகம்/CV Shanmugam

இது தான் சுயமரியாதை இயக்கமா? திமுகவின் சுயமரியாதை உதயநிதியின் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சுயமரியாதையை தூக்கிப் பிடிக்கும் பொன்முடி, துரைமுருகன் போன்றோர் தற்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதை வரவேற்கிறேன் என்கிறார்கள்.

இப்போது எங்கே போனார்கள் உங்கள் அண்ணா, பெரியார் எல்லாம்?’ என கடுமையாக விளாசியுள்ளார்.    

சி.வி.சண்முகம்/CV Shanmugam



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.