திருப்பதிக்கு பின் கடப்பா தர்காவிற்கு ஏஆர் ரஹ்மான் உடன் சென்ற ரஜினி

கடப்பா : திருப்பதிக்கு மகள் ஐஸ்வர்யா உடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த், பின்னர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உடன் கடப்பாவில் உள்ள அமீன் தர்காவிற்கு சென்று வழிபாடு செய்தார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இருதினங்களுக்கு முன் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி, நேற்று இரவு திருப்பதி சென்றார். அங்கு டி.எஸ்.ஆர் விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து இன்று(டிச., 15) அதிகாலை சுப்ரபாத சேவையில் திருப்பதி ஏழுமலையானை மகள் ஐஸ்வர்யா உடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் மதியம் 12மணியளவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற அமீன் தர்காவிற்கு சென்றார் ரஜினி. அவருடன் மகள் ஐஸ்வர்யாவும் உடன் சென்றார். அங்கு தர்கா நடவடிக்கைகளை கேட்டு அறிந்து கொண்டவர் பின்னர் நடந்த பிரார்த்தனையிலும் பங்கேற்றார். ரஜினி, ரஹ்மான் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.