புதுடில்லி: காங்., க்கு மட்டுமல்ல, நாட்டுக்கே ராகுல் பெரும் அவமானமாக மாறியுள்ளார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
காங்., எம்.பி ராகுல் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பா.ஜ.,வை நிச்சயம் காங்கிரஸ் கட்சி வீழ்த்தும். தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிராகவும் திட்டமிட்டு அவதூறு பிரசாரம் செய்யப்படுகிறது. கட்சி வலுவிழந்து போகிறது என்ற கருத்தை பா.ஜ.,வினரால் பரப்பப்படுகிறது. எல்லையில் சீனா போருக்கு தயாராகி வருகிறது; ஆனால் நமது அரசு அதனை ஏற்க மறுக்கிறது என விமர்சித்து பேசினார்.

இந்நிலையில், தவாங்கின் யங்ஷ்டே பகுதிக்கு சென்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேரில் சென்று ஆய்வு செய்தார். பிறகு, வெளியிட்ட அறிக்கையில், போதுமான அளவு ராணுவ வீரர்கள் குவித்துள்ளதால், இந்திய பகுதி பாதுகாப்பாக உள்ளது எனக்கூறியுள்ளார். மேலும் அவர், இந்திய ராணுவத்தை மட்டும் ராகுல் அவமதிக்கவில்லை, ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமதித்துள்ளார்.
காங்., க்கு மட்டுமல்ல, நாட்டுக்கே ராகுல் பெரும் அவமானமாகவும் மாறியுள்ளார். அதே வேளையில், இந்திய ராணுவத்தை நினைத்து இந்திய மக்கள் பெருமைப்படுகிறார்கள். நமது ஆயுதப் படைகள் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement