ஓடுபாதையில் மோதிய அமெரிக்க போர் விமானம்: கணநேரத்தில் உயிர் பிழைத்த விமானி: வைரல் வீடியோ


அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஓடுபாதையில் மோதி  விபத்துக்கு உள்ளான நிலையில்,  இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

போர் விமானம் விபத்து

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் வொர்த்தில் உள்ள கூட்டு இருப்புத் தளமான கடற்படை விமான தளத்தில் வியாழன் கிழமை அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஓடுபாதையில் மோதி விபத்திற்குள்ளானது.

F-35B என்ற அமெரிக்க ராணுவ விமானமானது, ஓடுபாதையில் ஹெலிகாப்டரை போல் செங்குத்து தரையிறக்கத்திற்கு முயன்றது போல் தோன்றுகிறது, அப்போது போர் விமானத்தின் முன் பகுதியானது சரிந்து ஓடுபாதையில் மோதவே, விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

விமானம் கட்டுப்பாட்டை இழந்து என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானத்தை விட்டு வெளியேறினார்.

வைரலான வீடியோ 

இந்நிலையில் அமெரிக்க போர் விமானம் ஒன்று ஓடுபாதையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

ஓடுபாதையில் மோதிய அமெரிக்க போர் விமானம்: கணநேரத்தில் உயிர் பிழைத்த விமானி: வைரல் வீடியோ | F 35B Fighter Jet Of Us Armed Forces CrashedF-35B Lightning II(Military.com)

விபத்து குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலில், அமெரிக்க F-35B ரக மின்னல் II ஜெட் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது, ஆனால் விமானத்தின் விமானி பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேறினார் என்று தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.