
அனுஷ்கா 48 படப்பிடிப்பு தொடங்கியது
2020ல் நடித்த சைலன்ஸ் படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகர் நவீன் பாலி செட்டியுடன் இணைந்து அனுஷ்கா ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. பின்னர் அந்த படம் டிராப் ஆகி விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு அனுஷ்கா 48 என்று தலைப்பு வைத்துள்ளனர். சில தினங்களாக இந்த படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். நடுத்தர வயது சமையல்கார பெண், ஒரு இளைஞனை காதலிப்பது போன்ற கதையில் இந்த படம் உருவாகிறது. யுவி கிரியேசன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளார்கள்.