ஆனி பிராங்க் தங்கையுடன் நடனமாடி மகிழ்ந்த பிரித்தானிய மன்னர் சார்லஸ்: வைரலாகும் வீடியோ


பிரித்தானியாவில் உள்ள யூதர்களின் சமூக கூடத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் நண்பர்களுடன் நடனமாடி மகிழ்ந்துள்ளார்.

யூதர்களின் குளிர்கால கொண்டாட்டம்

பிரித்தானியாவின் வடக்கு லண்டன் பகுதியில் உள்ள யூதர்களின் சமூக கூடத்தில் நடைபெற்ற விழாவிற்கு பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் வெள்ளிக்கிழமை விஜயம் செய்தார்.

யூதர்களின் குளிர்கால திருவிழாவான ஹனுக்கா கொண்டாட்டத்தில் மன்னர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அத்துடன் வடக்கு லண்டன் பகுதியின் பின்ச்லியில் உள்ள மையத்திற்கு தேவையான அரிசி மற்றும் tinned டூனா-வையும் வழங்கினார், மேலும் அங்கு அவர் பள்ளி குழந்தைகளையும், அகதிகளையும் மற்றும் ஹோலோகாஸ்ட்டில் உயிர் பிழைத்தவர்களையும் சந்தித்து  பேசினார்.

நடனமாடிய மன்னர் மூன்றாம் சார்லஸ்

யூதர்களின் திருவிழாவில் கலந்து கொண்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆனி பிராங்க்-கின் வளர்ப்பு சகோதரியான ஈவா ஸ்க்லோஸ் உடன் கைகோர்த்து நடனமாடி மகிழ்ந்தார்.

ஈவா ஸ்க்லோஸ்(93) ஹிட்லரின் வதை முகாமில் இருந்து உயிர் பிழைத்த பிறகு, உலகம் முழுவதும் மனிதாபிமானம் மற்றும் அமைதியை பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனி பிராங்க் தங்கையுடன் நடனமாடி மகிழ்ந்த பிரித்தானிய மன்னர் சார்லஸ்: வைரலாகும் வீடியோ | King Charles Dances In Jewish Community Centretwitter

மன்னருடன் நடனமாடியது குறித்து பேசிய ஈவா ஸ்க்லோஸ், மன்னர் இனிமையாக இருந்தார், அவர் நிதானமாக அதை ரசித்தார், நான் அவருடன் சேர்ந்து நடனமாட முயற்சித்தேன் என்று தெரிவித்தார்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது நண்பர்களுடன் கைகோர்த்து நடனமாடி மகிழ்ந்த வீடியோவை பக்கிங்காம் அரண்மனை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.