சென்னை: சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியின் தாத்தா, சித்தப்பாக்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறுமியின் சகோதரர்கள் ஒருவருக்கு 10 ஆண்டும், மற்றொருவருக்கு 5 ஆண்டும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவின் புகாரில் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
