பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்துவது தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு…


பிரித்தானியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு நாடுகடத்துவது சட்டத்திற்குட்பட்டதுதான் என பிரித்தானிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் பிரித்தானிய அரசின் திட்டம்

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடுகடத்துவது என்னும் திட்டத்தை, முந்தைய பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் அறிவித்தார்.

அந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு உருவான நிலையில், விடயம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்துவது தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு... | Rwanda Migrant Plan Is Lawful High Court Rules UkEPA/BBC

நீதிமன்றத்தின் தீர்ப்பு 

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடுகடத்தும் திட்டம் தொடர்பான வழக்கில் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த திட்டம் ஐ.நாவின் அகதிகள் ஒப்பந்தத்தையோ அல்லது மனித உரிமை விதிகளையோ மீறவில்லை என உயர்நீதிமன்றம் தான் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.