பொங்கல் பரிசுத் தொகுப்பு… முதல்வர் ஸ்டாலின் ஸ்மார்ட் முடிவு!

பொங்கல் பண்டிகைக்கு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 100 ரூபாய் ரொக்கம் பணம் என்று ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பழக்கம், பின்னர் எடப்பாடி ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசு 2500 ரூபாய் என்றானது. பொங்கல் பண்டிகை என்றாலே, அரசாங்கம் தங்களுக்கு எவ்வளவு பணம் பரிசாக கொடுக்கும் என்று ரேஷன் அட்டைதாரர்கள் கேட்கும் அளவுக்கு இந்த பழக்கம் கடந்த சில, பல ஆண்டுகளாக திராவிட ஆட்சியாளர்களால் வழக்கப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் வெளிப்பாடாகவே கடந்த ஆண்டும் (2022) பொங்கல் பரிசுத் தொகுப்புடன் திராவிட மாடல் அரசு ரொக்கப் பணமும் அளிக்கும் என்று வெகுஜன மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்பாக 21 பொருட்கள் மட்டும் வழங்கப்புடும் என்றும், ரொக்கப் பணம் எதுவும் அளிக்கப்படாது எனவும் திமுக அரசு அதிரடியாக அறிவித்தது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆனால், எடப்பாடி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு 2021 ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கப் பணமும் அளித்தது. அதனால் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட முடிந்தது. ஆனால் கடந்த முறை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பரிசுத தொகுப்புடன் ரொக்கப் பணமாக ஆயிரம், இரண்டாயிரம் கூட அளிக்காததால், பொங்கல் பண்டிகை அவ்வளவாக இனிக்கவில்லை என்பதுதான் வெகுஜன மக்களின் மனநிலையாக இருந்து வந்தது.

கொரோனா உச்சத்தில் இருந்த கடுமையான காலகட்டத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்ற உடனே தேர்தலின்போது அளித்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, கொரோனா நிவாரண நிிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரண்டு தவணைகளாக 4000 ரூபாய் அளித்தார். 4000 ரூபாய் நிவாரணம் அளித்து ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தற்போது பொங்கல் பண்டிகைக்கு எப்படி ரொக்கப் பணம் தர முடியும்? அதுவும் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும் இந்த தருணத்தில்… என்று உடன்பிறப்புகள் லாஜிக்காக அப்போது கேளவி எழுப்பி இருந்தாலும், அதெல்லாம் பொதுமக்கள் மத்தியில் அவ்வளாக எடுப்படவில்லை.

பொங்கலுக்கு எடப்பாடி பழனிசாமி 2500 ரூபாய் தந்தாரே, ஸ்டாலினால் ஏன் அதனை தரமுடியவில்லை? என்பதுதான் ரேஷன் அட்டைதாரர்கள் பெரும்பாலோரின் பிரதான ஒற்றை கேள்வியாக இருந்தது.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு இருந்த இந்த மனக்குறையை போக்கும்விதத்தில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஸ்மார்ட் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.தமது தலைமையிலான தமிழக அமைச்சரவையின் ஆலோசனைப்படி ஸ்டாலின் இந்த ஸ்மார்ட் முடிவை எடுத்துள்ளதாக கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, இந்த முறை பொங்கலுக்கு 21 பரிசுத் தொகுப்புகளுக்கு பதிலாக அரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும், அவற்றுடன் தலா 1000 ரூபாய் ரொக்கமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அளிக்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு பிளஸ் ரொக்கப் பணம் என்ற டூ இன் ஒன் முடிவால், கடந்த முறை பொங்கலுக்கு தமிழக அரசு பணம் தரவில்லை என்ற ரேஷன் அட்டைதாரர்களி்ன் மனவருத்தம் இந்த முறை நீங்கும். அத்துடன் மின் கட்டண உயர்வால் திமுக அரசின் மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் கடும் அதிருப்தியில் உள்ள தமிழக மக்களை, டூ இன் ஒன் பொங்கல் பரிசு சற்று ஆற்றுப்படுத்தும் எனவும் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.