சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 உறுப்பினர்களை நியமனம் செய்ய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.20) சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டார்.
இந்தத் தேர்வுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய இக்குழு பரிந்துரை செய்துள்ளது.