எங்களிடம் அணு ஆயுதம் இருப்பதை மறந்துவிட வேண்டாம்; பாகிஸ்தான் எச்சரிக்கை.!

ஒசாமா பின்லேடன் தற்போது கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் அவரை விட அதிகமாக குஜராத் கலவரத்தில் கொன்று குவித்தவர் தற்போது பிரதமராக இருக்கிறார் என இந்திய பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் உருவ பொம்மைகளை எரித்தனர்.

இந்தநிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து, தங்களிடம் அணு ஆயுதம் இருப்பதை இந்தியா மறந்து விட வேண்டாம் என பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பெண் தலைவரும், அமைச்சருமான ஷாஜியா மாரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது,‘‘ பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக்கூடாது. எங்களது அணுசக்தி நிலை அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தேவை ஏற்பட்டால் நாங்கள் பின்வாங்க மாட்டோம். எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும்.

பழனியில் மின்தடை காரணமாக ரோப் கார் பாதியில் நின்றதால் பரபரப்பு.

எங்களை அவமதித்தாதால் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். பாகிஸ்தானும் சமமான தீவிரத்துடன் பதிலடி கொடுக்கும். இந்தியாவின் பிரதமர் நாட்டில் வெறுப்பை மட்டுமே பரப்புகிறார். மோடி அரசாங்கம் சண்டையிட வந்தால், பிறகு அவருக்கு தக்க பதிலடி கிடைக்கும். பாகிஸ்தான் மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறினால், பாகிஸ்தான் அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்காது’’ இவ்வாறு அவர் கூறினார்.

‘கொரோனா.. இனிமே அதுக்கு அவசியம் இல்லை’ – WHO நம்பிக்கை!

அதைத் தொடர்ந்து ஷாஜியா மாரி தனது டுவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தான் பொறுப்புள்ள அணுசக்தி நாடு. இந்திய ஊடகங்களில் உள்ள சில கூறுகள் பீதியை உருவாக்க முயலுகின்றன. சில இந்திய அமைச்சர்களின் சகிக்க முடியாத கருத்துகளுக்கே, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அவ்வாறு கருத்து தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவை விட பாகிஸ்தான் அதிகம் தியாகம் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.