திருமலை: விஷால் நடித்துள்ள ‘லத்தி’ என்ற படம் நாளை திரைக்கு வருகிறது. திருப்பதியில் இப்படம் சம்பந்தமாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: நமது ரசிகர்களின்பேராதரவுடன் கடந்த 18 ஆண்டுகளாக நான் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறேன். இந்நிலையில், குப்பம் தொகுதியில் போட்டியிடுவேனா என்று கேட்கிறார்கள். குப்பத்தில் என் தந்தை ஜி.கே.ரெட்டி வியாபாரம் செய்து வந்தார். இதனால், நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு சில ஆண்டுகள் அங்கு தங்கியிருந்து வியாபாரம் செய்தேன்.
எனவே, குப்பம் தொகுதியில் ஒவ்வொரு தெருவை யும், அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்களையும் எனக்கு தெரியும். ஆனால், நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஜெகன் மோகன் ரெட்டி மீது அபிமானம் உண்டு, அரசியலில் இருந்து எம்எல்ஏவாக பொதுமக்களுக்கு சேவை செய்வதை விட, சினிமாவில் நடித்து ரசிகர்களை திருப்திப்படுத்தி, என்னால் முடிந்த சமூக சேவையை என் அறக்கட்டளை மூலமாக செய் வதையே நான் பெரிதும் விரும்புகிறேன்.