ராஜாஜி நகர், : ராஜாஜி நகர் விளையாட்டு மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் தேசிய அளவிலான ஆண்கள், பெண்களுக்கான20வது வாஜ்பாய் கோப்பை 2022 வாலிபால் போட்டி இன்று துவங்குகிறது.
பெங்களூரில் நேற்று ராஜாஜி நகர் விளையாட்டு மற்றும் கலாச்சார சங்க தலைவரும், முன்னாள் துணை மேயருமான ஹரிஷ் கூறியதாவது;
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி, ௧9 ஆண்டுகளாக தேசிய அளவிலான ஆண்கள், பெண்கள் வாஜ்பாய் வாலிபால் கோப்பை போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு 20வது ஆண்டாக நாளை (இன்று) முதல் 25ம் தேதி வரை ராஜாஜிநகர் சுவாமி விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
இன்று மாலை 6:00 மணிக்கு போட்டியை, 20 பெண் வீராங்கனைகள் துவக்கி வைக்கின்றனர்.
ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி – தமிழகம், கன்டகா, கேரளா போலீஸ், பி.பி.சி.எல்., – கேரளா, கே.எஸ்.இ.பி., – கேரளா, இந்தியன் நெவினவடலி என ஆறு அணியினரும்;
பெண்கள் பிரிவில் தமிழகம், கே.எஸ்.இ.பி., – கேரளா, கேரளா போலீஸ், கர்நாடகாவின் ஆர்.எஸ்.சி.ஏ., என நான்கு அணியினரும் என பத்து அணிகள் விளையாடுகின்றன.
போட்டியை காண பெருமளவில் மக்கள் வருவர் என எதிர்பார்க்கிறோம். போட்டி நாட்களில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
அரசியல், பெண் வீராங்கனைகள், அர்ஜுனா விருது பெற்றவர்கள், தேசியளவில் வெற்றி பெற்ற பெண்கள், போலீஸ் அதிகாரிகள் என பல தரப்பில் சிறப்பு விருந்தினர்கள் வருகை தருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்