செங்கல்பட்டு மாவட்டத்தில் பசுமாட்டை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர தேவனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் ரெட்டிபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் நேற்று காலை ரெங்கநாதன் அவென்யூ பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை பசு மாடு மிதித்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி பசுமாடு துடித்ததை பார்த்த மணிகண்டன், பசு மாட்டை காபாற்ற முயன்றுள்ளார். அப்பொழுது மணிகண்டன் மீதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். மேலும் அவரது பசுமாடும் உயிரிழந்தது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.