
தங்கலான் படத்திற்காக சிலம்பம் பயிற்சி எடுத்த மாளவிகா மோகனன்!
விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். கோலார் தங்க வயலில் நடக்கும் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்திற்காக தற்போது தீவிரமாக சிலம்பப் பயிற்சி எடுத்து வருகிறார் மாளவிகா மோகனன். தான் பயிற்சி பெரும் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
அதோடு, முதல் நாளில் இந்த சிலம்பத்தை கையில் பிடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. தற்காப்பு கலையின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து பயிற்சி எடுத்து வருகிறேன். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் இந்த கலையில் உச்சத்தை அடைய முடியும். எனக்கு இந்த அற்புதமான பயிற்சியை பொறுமையாக கற்றுத் தந்த பயிற்சியாளருக்கு மிக்க நன்றி என்றும் பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.