வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா வெற்றி| 2nd Test: India win

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மிர்புர்: வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் மிர்புரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 227, இந்தியா 314 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் வங்கேதேச அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு வங்கதேச பவுலர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது.

latest tamil news

4ம் நாள் ஆட்டம் துவங்கியதும் அக்சர் படேல் 34, உனத் கட் 13 ரன்களுக்கு அவுட்டாகினர். ரிஷப் பன்ட் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். ஸ்ரேயஸ் ஐயர் 29 ரன்களுடனும், அஸ்வின் 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.