பீகார்: பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி தொடங்கயுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
பீகாரை சேர்ந்த அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரை நேரில் சந்தித்து அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.அதன் பிறகு பாரதிய ஜனதா பின் உறவை முறித்து கொண்ட நிதிஷ் தாணு கட்சி ஆதரவுடன் மீண்டும் முதல்வர் ஆனார். இந்நிலையில் பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை புத்தாண்டில் வருகிற 7ம் தேதி முதல் கணக்கெடுக்க தொடங்க மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது.
500 கோடி ரூபாய் செலவில் 2 கட்டங்களாக இந்த கணக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள், 3 லட்சம் பேர் இந்த பணியில் ஈடுபடயுள்ளனர். 2023 மே மாதத்தில் பணியை முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. சாதிவாரி மக்கள் பெயர்கள் கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசிடம் தமிழகம் உட்பட தமிழக கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பீகார் அரசு முதலாவதாக கணக்கெடுப்பில் ஈடுபட்டு உள்ளது.