வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மீண்டும் பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் சில பிராந்தியங்களை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
![]() |
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த மார்ச் மற்றும் அக்டோபரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் இன்று மீண்டும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, மீண்டும் பிரதமர் மோடியுடன் தொலை பேசி வாயிலாக பேசினர். அப்போது உக்ரைனில் அமைதி நிலவ உதவ வேண்டும் எனவும், ஐ.நா.வில் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு நன்றி தெரிவித்தும், ஜி20 மாநாட்டின் இந்தியாவின் தலைமை பொறுப்பு வெற்றியடைய வாழ்த்துவுதாகவும் தெரிவித்தாக, ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement