வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மேட்டுப்பாளையம்: லோக்சபா தேர்தல் மட்டுமின்றி தமிழக சட்டசபை தேர்தலிலும் மாற்றம் நிகழும் என தேசிய பா.ஜ., தலைவர் நட்டா கூறினார்.
மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேசிய பா.ஜ., தலைவர் ஜெ.பி நட்டா கலந்து கொண்டு பேசியவதாவது:லோக்சபா தேர்தல் மட்டுமின்றி தமிழக சட்டசபை தேர்தலிலும் மாற்றம் நிகழும். நம்பிக்கையான முன்னேற்றத்தை பார்த்து கொண்டே இருக்கின்றோம்.

யாரும் பட்டினியாக இருக்க கூடாது என்பதற்காக ”அன்னை யோஜனா” திட்டத்தை கொண்டு வந்தோம். இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய அமைச்சர் எல். முருகன் பேசுகையில், பா.ஜ., ஆட்சியில் நாடு வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மத்திய அரசும், பிரதமரும் செயல்படுகின்றனர். மோடி ஆட்சி அற்புதமானது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement