வாரணாசி முதல் திப்ரூகார் வரை ஆற்றுவழி கப்பல் போக்குவரத்தை ஜன.13 ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அஸ்ஸாமில் உள்ள தீப்ரூகர் வரை ஆற்றுவழி கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி வரும் 13ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

உலகின் மிகப்பெரிய கப்பல் பயணமாக இருக்கும் இது சுமார் 3 ஆயிரத்து 200 கிலோமீட்டர் தூரத்தை கங்கை உள்பட 27 ஆறுகள் வழியாக கடந்து செல்லும்.

கங்கா ஆரத்தியை கப்பலில் இருந்து காணவும் 50 முக்கிய சுற்றுலாத் தலங்களை கடந்தும் இந்தக் கப்பல் பயணம் தொடரும்.

வங்காளதேசத்தில் ஆயிரத்து 100 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும்.

வெளிநாட்டவரைக் கவரும் சுற்றுலா திட்டமாக இது கருதப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் காணொலி வாயிலாக நலத்திட்ட உதவிகளை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த போது பிரதமர் மோடி இதனை அறிவித்து, வங்கதேச மக்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.