பொங்கல் பரிசு ரூ.1,000 வேண்டாம் என கருதுவோர் அரசுக்கு அதை தெரிவிப்பது எப்படி?

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு அரிசி ரேஷன் அட்டைதார்ர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றுடன் 1000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிிவித்திருந்தது. இந்த அறிவிப்பில் கரும்பு இடம்பெறாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கரும்பு இல்லாமல் பொங்கலா என்று அதிமுக ,பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் குரல் கொடுக்கவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பும் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவி்த்திருந்தது.

இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த வித்தியாசமான கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்பட உள்ள 1000 ரூபாய் ரொக்கப் பரிசை வாங்க விரும்பாத அரிசி அட்டைதாரர்களும் உள்ளனராம்.

அரசு தரும் 1,000 ரூபாய்தான் நாங்கள் பொங்கல் கொண்டாட வேண்டுமா? இதுதான் சுயமரியாதையா? என்ற ரீதியில் இவர்கள் கேள்வி எழுப்புகின்றனராம். இந்த கேள்வியின் எதிர்விளைவாகவோ, அடுத்த கட்டமாகவோ அரசு தரும் பொங்கல் பரிசுத்தொகை 1,000 ரூபாயை வாங்க விரும்பாத ரேஷன் அட்டைதாரர்கள், தங்களது இந்த விருப்பத்தை அரசுக்கு முறைப்படி எப்படி தெரிவிப்பது? என்ற கேள்வியையும் முன் வைத்து வருகின்றனர்.

1000 ரூபாய் பொங்கல் பரிசு வேண்டாம் என்ற தங்களது விருப்பத்தை பதிவு செய்ய தெரிவிக்க, உணவு வழங்கல் துறை தமது அதிகாரபூர்வ இணையதளத்தில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், இதற்காக மொபைல் செயலி வசதியையும் அரசு ஏற்படுத்தி தரலாம் என்று அவர்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொங்கல் பரிசுத் தொகையை வேண்டாம் என்று சொல்லும் ரேஷன் அட்டைதாரர்களின் 1000 ரூபாய் எவ்வித முறைகேடும் இல்லாமல் மீண்டும் அது அரசு கஜானாவுக்கே

செல்வதை உறுதிசெய்ய,, இந்த இணையதள வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்குவதற்கான டோக்கன்கள் விநியோகம் 9 ஆம் தேதி தொடங்க உள்ளதால், அதற்கு முன் இந்த வசதியை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அவர்கள் வ,லியுறுத்தி உள்ளனர்.

அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள் 2.19 கோடி பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கம் அளிக்கப்பட உள்ள நிலையில் இப்படியொரு கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 இல் பெய்த வரலாறு காணாத பருவமழையின் விளைாவக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அப்போது முற்றிலும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், மழை வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளுக்கு 5000 ரூபாயும் வெள்ள நிவாரணமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிவாரணத் தொகையை சென்னையைச் சேர்ந்த 30 ஆயிரம் வேண்டாம் என்று அதிரடியாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.