மழைப்பொழிவு குறைந்த, பாலைவன நாடாக அறியப்படும் சவுதிஅரேபியாவில் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் ரியாத்தின் வடமேற்கில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உஷைகர் பகுதியில் பெய்த கனமழையினால், அங்குள்ள ஒரு பாலத்தின் அடியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே, அந்நாட்டின் 2வது பெரிய நகரமான ஜெட்டாவில் நவம்பர் மாதம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.