டெல்லி: கடந்த ஆண்டு (2022ம் ஆண்டு) மட்டும் 1.25 லட்சம் இந்திய மாணாக்கர்களுக்கு விசா வழங்கி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. இது சாதனை யாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் படிப்பதற்கும், பணியாற்றுவதற்கும் இந்தியர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. பலருக்கு இதுவே தங்களது லட்சியமாக உள்ளது. இதனால், ஆண்டுதோறும் பல லட்சம் பேர் அமெரிக்காவில் படிக்கவும், பணி நிமித்தமாகவும் செல்ல விரும்புகின்றனர். இதனால் விசா கிடைப்பதில் சிலருக்கு தாமதங்கள் ஏற்படுகிறது. இது தொடர்பாக இரு நாட்டு வெளியுறவுத்துறை […]
