கடலூர் மாவட்டத்தில் மனைவி கண்டித்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
கடலூர் மாவட்டம் லக்கூர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சாமிநாதன்(32). இவரது மனைவி தீபா. இந்நிலையில் சாமிநாதன் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த சாமிநாதன் நேற்று இரவு வீட்டை வீட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் சாமிநாதன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தீபா, உறவினர்கள் உதவியுடன் கணவரை தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் சாமிநாதன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள விளைநிலத்தில் சாமிநாதன் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராமநத்தம் போலீசார் சாமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மனைவி கண்டித்ததால் சாமிநாதன் மதுவில் விஷம் கலந்து குளித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.