மாதவிடாய் என்பது ஒவ்வொரு பூப்படைந்த பெண்ணும் சந்திக்க கூடிய இயற்கையான சுழற்சி முறையாகும். மாதந்தோறும் கருப்பையில் சேமிக்கப்படும் உதிரம், கரு சினையுராத பட்சத்தில் வெளியேற்றப்படுவதே மாதவிடாயாகும். இது மாதந்தோறும் 21லிருந்து 35 நாட்களுக்கு ஒருமுறை 3 அல்லது 7 நாட்கள் வரை நீடிக்க கூடியது.
அனேகமான பெண்களுக்கு மாதவிடாயின்போது வயிற்றின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் அறிகுறிகளாக தோன்றுகின்றன. இதோடு கடுமையான மன அழுத்ததிற்கும் பெண்கள் ஆளாவதுண்டு.
இந்நிலையில்,ராஜஸ்தான் மாநில சமூக நல வாரியத்தின் பொதுக் கூட்டத்தில், மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் திட்டத்தை (WFH)அமல்படுத்துமாறு அரசுக்கு மாநில சமூக நல வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும். குடும்ப ஆலோசனை மையம், முதியோர் இல்ல அறுவை சிகிச்சை, சர்வதேச மொழி கற்பித்தல் மையம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அத்துடன் ராஜஸ்தானில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ‘குட் டச், பேட் டச்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.