இன்ச் டேப் கொண்டு அளக்கப்படும் கரும்புகள்… விவசாயிகள் அதிர்ச்சி!!

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பை சேர்த்து வழங்க, விவசாயிகளிடம் இருந்து செங்கருப்பை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் போது 6 அடிக்கு குறைவான கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 742 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் 40 ஏக்கர் கரும்பு மட்டுமே போதுமானது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து கரும்பு கொள்முதல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், திம்மராவுத்தன் குப்பம் பகுதியில் கரும்புகொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அவருடன் வேளாண்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அப்போது 6 அடிக்கு குறைவாக உள்ள கரும்புகளை வாங்க வேண்டாம் என்று ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை அடுத்து இன்ச் டேப் கொண்டு கரும்புகள் 6 அடி உள்ளதா என்று அதிகாரிகள் அளந்து காட்டினர். மேலும் 6 அடிக்கு அதிகமாக உள்ள கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்யவதற்கான உத்தரவில் அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.

இதனை கண்ட விவசாயிகள், ஒவ்வொரு கரும்பும் உயர்வாக வளர்வதும், தாழ்வாக இருப்பது எங்களுடை தவறு கிடையாது. ஒரு வயலில் உள்ள அனைத்து கரும்புகளையும் வாங்கினால்தான் எங்களுக்கு உரிய லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.