TRB: ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெரிய மாற்றம்… தமிழக அரசு வேற லெவல் ஏற்பாடு!

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக் உள்ளிட்டவற்றில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் உரிய தேர்வுகளை TRB எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இதன்மூலம் விரைவாக ஆசிரியர்களை தேர்வு செய்யும் வகையிலும், முறைகேடுகளை தவிர்க்கும் வகையிலும் தமிழக அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் மனிதவள மேம்பாட்டு செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.

தேர்வு வாரிய குழு

இதுதவிர பள்ளிக் கல்வித்துறை ஆணையர், தொழில்நுட்ப கல்வி ஆணையர், கல்வியியல் துறை இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்கள் இரண்டு பேர் ஆசிரியர் தேர்வு வாரிய குழுவில் இடம்பெறுவர். போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் விகிதம் 1:1.25 என்ற அளவில் இருக்கும். ஒரு பணியிடத்திற்கு 1.25 மடங்கு பேர் தேர்வு செய்யப்பட்டு முறையாக ஆவணங்களை சரிபார்த்து உரிய வழிகாட்டுதல்களின் படி தேர்வு செய்யப்படுவர்.

பணியிடங்களை நிரப்புதல்

இதுதொடர்பாக ஜனவரி 3, 2023ல் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், TRB தேர்வின் மூலம் அனைத்து கல்வி நிலையங்களுக்கான ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை மாநில பல்கலைக்கழகங்களின் துணை பேராசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தான் தேர்வு செய்து வருகின்றனர். இந்த சூழலில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளின் எண்ணிக்கை 71ஆக அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ப்ரோகிராமர்ஸ், டேட்டா அனலிஸ்ட்ஸ், டேட்டா அட்மினிஸ்டிரேடர்ஸ் உள்ளிட்டோர் அடங்குவர்.

சீனியாரிட்டி முறைக்கு குட்பை

மாநில அரசு தரப்பை சேர்ந்த அதிகாரிகள் சிலர் கூறுகையில், இதற்கு முன்பு TRB பின்பற்றி வந்த நடைமுறைகள் இனிமேல் செல்லாது. நடப்பு காலத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மட்டும் செய்யப்படும். அதன்படி வேலை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் போட்டித் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

TRB-க்கு புதிய குழு

முதலில் OMR ஷீட்கள் மூலம் தேர்வு எழுத வேண்டும். பிறகு கணினி வழி தேர்வாக மாற்றப்பட்டது. இதன்மூலம் முறைகேடுகள் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளன. TRB-க்கு என தனியாக கட்டிடம் ஒன்று பயன்பாட்டிற்கு வரவுள்ளது. கேள்வித்தாள்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவர்.

என்னென்ன மாற்றங்கள்

இதற்காக ஐஐடி உள்ளிட்ட பல்வேறு தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் வல்லுநர்கள் உறுதுணையாக இருப்பர். மேலும் TRB தேர்வுகள், செயல்பாடுகள் தொடர்பான புகார்கள், கருத்துகள் தெரிவிக்க டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் வசதி 24X7 என்ற வகையில் கொண்டு வரப்படவுள்ளது. மாவட்ட அளவில் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட தேர்வு கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்படும்.

மொத்தம் 39

இவர்கள் சட்ட ரீதியான விஷயங்களை கையாள்வர். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை தேர்வு கட்டணத்தை உயர்த்தவும் திட்டமிடப்படும். இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் மொத்தம் 39 பரிந்துரைகளை மாநில அரசுக்கு சிறப்பு குழு வழங்கியது. அவை சில மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.