தியேட்டரில் வெளியான துணிவு, வாரிசு படங்கள்! கொண்டாட்ட வெள்ளத்தில் ரசிகர்கள்!

தமிழ்நாடு முழுவதும் உள்ளிட்ட நகரங்களில் துணிவு, வாரிசு திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் இவ்வருடம் ஒன்றாக வெளியாகியுள்ளது. பொங்கலை ஒட்டி, இரு படங்களும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகியுள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படமும், 4 மணிக்கு வாரிசு படமும் வெளியாகியுள்ளது. முதல் காட்சியை கண்டுகளித்து உற்சாகத்தில் ரசிகர்கள் திளைத்துவருகின்றனர்.

image

இரு திரைப்படங்களையும் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடைகோரி தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இரண்டு திரைப்படங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே வாரிசு படத்தை வெளியிட 4,548 இணையதள பக்கங்களுக்கும், துணிவு படத்தை வெளியிட 2,754 இணையதள பக்கங்களுக்கும் தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இரு திரைப்படங்களையும் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

image

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் வாரிசு படம் தெலுங்கில் வாரசுடு என்ற பெயரில் ரிலீஸாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 225 கோடி ரூபாய் என கூறப்பட்டு வருகிறது, இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்தற்கு 125 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். ரிலீசுக்கு முன்பே இப்படம் 295.5 கோடி ரூபாய்க்கு வாரிசு திரைப்படம் விற்பனை ஆகியுள்ளது. விஜய்யின் முந்தைய படத்தின் விலையை வைத்து பார்த்தாலும் 300 கோடி ரூபாயை விஜய்யின் வாரிசு திரைப்படம் குவித்துள்ளது.

இதேபோல இயக்குனர் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு. இந்த திரைபடத்தின் மொத்த பட்ஜெட் 160 கோடி ரூபாய் திரைப்படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் – 70 கோடி ரூபாய். இந்த படம் ரிலீஸூக்கு முன்பே 193.60 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.