சென்னை: தமிழநாடு அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 12வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், இன்றைய போராட்டத்தின்போது, ஏராளமான செவிலியர்கள், தங்களது பணி தொடர்பாக, கொரோனா உடையான பிபிகிட் அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். உலக நாடுகளை மிரட்டிய கொரோனா இந்தியாவிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த காலக்கட்டத்தில், மருத்துவ உதவிக்காக அப்போதைய அதிமுக அரசு […]
