AP Police Constable Admit Card 2023: ஆந்திர பிரதேச மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் (AP SLPRB) ஆனது ஜனவரி 12ம் தேதியான இன்று 2023ம் ஆண்டுக்கான ஆந்திர பிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டை வெளியிட்டுள்ளது. போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வினை எழுத விண்ணப்பித்து இருப்பவர்கள் slprb.ap.gov.in என்கிற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சரிபார்த்து ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது. 2023ம் ஆண்டில் நடைபெறும் ஆந்திர பிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் பண்ணிக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய நீங்கள் உங்களது ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் மற்றும் ஹால் டிக்கெட் நம்பரை உள்ளிட வேண்டும்.
ஆந்திர போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான ஹால் டிக்கெட் ஆனது கடந்த ஜனவரி 9ம் தேதியன்று வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டதால் ஹால் டிக்கெட் அந்த தேதியில் வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் காலியாக இருக்கும் கிட்டத்தட்ட 6100 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேச மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வினை ஜனவரி 22, 2023 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுதவரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்கு வரும்பொழுது மறக்காமல் ஹால் டிக்கெட்டையும், அதனுடன் அடையாள சான்றையும் எடுத்துவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.