வரலாற்றில் முதல் முறை: ஆளுநர் செய்ய போகும் அடுத்த சம்பவம்!

தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் ஆளுநர் ரவி பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 9ஆம் தேதி கூடியது. அப்போது உரையாற்றிய ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரைக்கு மாறாக சில பத்திகளை நீக்கியும் சிலவற்றை சேர்த்தும் ஆளுநர் ரவி வாசித்தார்.

தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றிருந்த ’திராவிட மாடல்’ என்ற வார்த்தையையும், ‘அமைதி பூங்கா தமிழ்நாடு’ என்ற வாக்கியத்தையும் குறிப்பிடாமல் ஆளுநர் ரவி தவிர்த்தார். சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்த 65ஆவது பத்தியை வாசிக்காமல் அப்படியே ஆளுநர் விட்டு விட்டார். மேலும், தமிழ்நாடு என்று தொடக்கத்தில் மட்டும் கூறி விட்டு, இந்த அரசு என்றும் ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.

ஆளுநரின் இந்த செயலுக்கு முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். ஆளுநர் வாசித்த உரைக்கு பதிலாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட உரையே அவைக்குறிப்பில் ஏற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அந்த சமயத்தில் ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து தேசிய கீதம் இசைக்கபப்டுவதற்கு முன்னதாகவே வெளியேறினார். ஆளுநர் ஒருவர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் போல் வெளிநடப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ரவி வரலாற்றில் முதன்முறையாக அடுத்து செய்யப் போகும் சம்பவம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அவனியாபுரத்தில் வருகிற 15ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. அந்த போட்டியை காண தமிழ்நாடு ஆளுநர் ரவி வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழ்நாடு ஆளுநர் ரவி வருகை தந்தால் ஜல்லிக்கட்டு வரலாற்றில் போட்டியை காண வருகை தரும் முதல் ஆளுநர் ரவி என்பது குறிப்பிடத்தக்கதாக அமையும்.

முன்னதாக, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஆய்வு செய்தார். தைத்திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் 15,16,17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்தி வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஆய்வு செய்தார். அவருடன் காவல்துறை உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்பாக நடத்துவது குறித்த ஆலோசனையிலும் அவர் ஈடுபட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.