ஆரோக்கியமான உற்பத்திக் கிராம நிகழ்ச்சித் தி;ட்டத்தின் கீழ் ,கண்டி மாவட்ட செயலகத்தின் மேற்பார்வையில் ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலகத்தின் அனுசரணையில் வெனிலா உற்பத்திக் கிராமத்திற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் முதற்கட்டமாக 75 குடும்பங்களை இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணைத்துள்ளதாக ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலாளர் மொஹான் தர்மதாஸ தெரிவித்தார்.
வெனிலா உற்பத்தித் துறையை மேற்பார்வையிடுவதற்காக சமூகவலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனூப பெஸ்குவெல் தலைமையிலான குழுவினர் நேற்று (11) தெம்பரலாவ கிராமத்திற்கு விஜயம் செய்தனர்.
இவ்வுற்பத்திக்காக தேசிய சந்தையொன்றை ஏற்படுத்துவதாகவும், அதற்காக வினைத்திறனாக உற்பத்தியி;ன் அளவை அதிகரிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.
உற்பத்தியாளர்களுக்காக போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இலகு கடன் வசதி மற்றும் வர்த்தக சந்தையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான (டாக்டர்) திலக் ராஜபக் க்ஷ , கண்டி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ரம்யா விஜேசுந்தர உட்பட அதிகாரிகள் பலரும் இம்மேற்பார்வை விஜயத்தில் கலந்துகொண்டனர்.