வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சிராஜ், குல்தீப் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி-20’ மற்றும் மூன்று ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. டுவென்டி-20 தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இன்று (ஜன.,12) கோல்கட்டாவில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, இலங்கை அணிக்கு அவிஸ்கா, நுவனிடு பெர்னாண்டோ ஜோடி துவக்கம் தந்தது. அவிஸ்கா 20 ரன்னில் வெளியேறினார். பின் களமிறங்கிய குசால் மெண்டிஸ் கைகொடுக்க பெர்னாண்டோ அரைசதத்துடன் ரன்அவுட்டானார்.
இதனைத்தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிய துவங்கின. தனஞ்சய டி சில்வா (0), குசால் மெண்டிஸ் (34), கேப்டன் ஷானகா (2), அஸ்லன்கா (15) அடுத்தடுத்து வெளியேறினர்.

பின் வரிசையில் ஹசரங்கா (21), கருணரத்னே (17), துனித் (32) ஆகியோரின் பங்களிப்புடன் அந்த அணி 200 ரன்னை கடந்தது. இறுதியில் 39.4 ஓவர்களில் இலங்கை அணி 215 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. ரஜிதா (17) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில் சிராஜ், குல்தீப் தலா 3 விக்., உம்ரான் மாலிக் 2 விக்., அக்சர் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 216 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement