சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய மாவட்டம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற பொழுது திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி அமைந்ததும் கும்பகோணமானது தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி கொடுத்து இருந்தார்.
நீண்ட காலமாக கும்பகோண மக்கள் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மனு மீது மனு போட்டு கோரிக்கை வைத்து வருகின்றனர். விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை பல்வேறு பகுதிகளாக பிரித்தபோது கும்பகோணம் மாவட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மாநிலத் தேவைகள் குறித்த பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அங்கீகரிக்கும் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.